திருப்புகழ் 243 இருமலு

 இருமலு ரோக முயலகன் வாத

     மெரிகுண நாசி ..... விடமேநீ


ரிழிவுவி டாத தலைவலி சோகை

     யெழுகள மாலை ..... யிவையோடே


பெருவயி றீளை யெரிகுலை சூலை

     பெருவலி வேறு ..... முளநோய்கள்


பிறவிகள் தோறு மெனைநலி யாத

     படியுன தாள்கள் .... அருள்வாயே


வருமொரு கோடி யசுரர்ப தாதி

     மடியஅ நேக ..... இசைபாடி


வருமொரு கால வயிரவ ராட

     வடிசுடர் வேலை ..... விடுவோனே


தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி

     தருதிரு மாதின் ..... மணவாளா


சலமிடை பூவி னடுவினில் வீறு

     தணிமலை மேவு ..... பெருமாளே