பதினேழ் ஒன்றும்விழை செய்ய பாதம் ஓலிடநன்
மதிபோல் மாமைமுக மண்டலம் ப்குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காதலால் த்ழுவ
நிதியே வாராயோ கைகள் நீளுகின்றனவே
சீவி முடித்தசிகை செம்பொன் சுட்டி நன்குழைகள்
மேவும் உ றுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ !
ஏவல் கொடுத்தருள எண்ணி என்முன் வாராயோ?
கூவை வெறுத்த கண்கள் இச்சை கொள்ளு கின்றனவே.
பாவேறுஞ் சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ !
சே ஏறுன் பவளத் தெய்வ வாயையே திறந்து
தூவேறு இன்கரைகள் இங்குச் சொல்ல வாராயோ?
கோவே! என்செவிகள் இச்சை கொள்ளு கின்றனவே.
பொன் ஆர் கண்டசரம் நன்கு பூண்ட தங்க ஒளிக்
கொன் ஆர் வேற்குழவீ ! நல்ல கொவ்வை நின் இதழை
என் ஆர் வந்தீர இங்கு நல்க வாராயோ?
உன் ஆர் உண் நிலையும் வாயும் ஊறுகின்றனவே.
எண் ஏறும் பல அயில் என்ற வேல்பிடித்து அசையும்
கண்ணே! செங்குழுவீ ! என்றன் கண்கள் நாடு அழகே!
தண் ஏறும் வதன முத்தந் தாராயோ பிறிது
நண்ணா என் உளந்தான் நின்னை நாடு கின்றதரோ
முத்தே! மாமணியே! முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்து ஆரம் புனைந்து என் முன்னர் வாராயோ? உ ழலுஞ்
சித்து ஆர் வேற்குழவீ ! உச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே! என் மூக்கில் இச்சை மீறு கின்றதரோ.
ஐ ஆர் நல் அரையில் பொன் வடங்கள் ஆட உழல்
வை ஆர் வேற்குழவீ ! இங்கு வாராயோ? கால்கள்
மை ஆர் கண்மலர்கள் இன்பு மல்க மோந்துகொள்ள
மெய்யா என் மூக்கில் இச்சை மீறுகின்றதரோ
பொன்போல் மேனியிலே நல்ல பூமணங் கமழும்
இன்பே! வேற்குழவீ ! இங்கு வாராயோ? விரியா
அன்பு ஆர் புன்முறுவல் செய்யும் ஆர்வில் பல் அழகென்
துன்பு ஈர் அம்பு எனவே நெஞ்சம் துள்ளு கின்றதரோ.
கள்ளார் செங்கரும்பே! கண்டு தேனே! இன்னமுது உண்
கிள்ளாய்! வேற்குழவீ ! அன்பர் கேளே! மாது உமையாள்
பிள்ளாய்! கண்ணி ஒன்று நல்ல பெட்பில் நான் தருவேன்
தள்ளாதே கொளற்கு என் முன்னர் வாராயோ தகையே.
மாண்பு ஆர் சந்தமுனி இன்ப வாழ்வே! நின் எழிலைக்
காண்பார் வேறு அழகு இங்குக் காண்பார் கொல்லோ? நான்
ஊண் பாடு அஞ்சி உனை நன்கு காண்பான் இன்றுவந்தேன்
வீண் போகாதபடி இங்ஙன் வாராய் வேற்குழவீ.